இறைச்சியும் பாலும் ஒரே இடத்தில் விற்பனை கொந்தளித்த பாஜக எம்எல்ஏ..! பரபரப்பு வீடியோ..
மத்திய பிரதேசத்தில் பால் மற்றும் கோழி இறைச்சியை விற்பனை செய்வதற்கு பாஜக எம்எல்ஏ ராமேஸ்வர சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் உள்ள நிலையில் பொது மக்களின் நலன் கருதி கோழி இறைச்சி மற்றும் பால் விற்பனை திட்டத்தின் கீழ் போபால் பகுதியில் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின பெண்கள் கூட்டுறவு நிறுவனத்தால் இங்கு கோழிகள் விற்பனை செய்யப்படுகிறது இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ ராமேஸ்வர் சர்மா முதலமைச்சருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார் அக்கடிதத்தில் கோழி இறைச்சி மற்றும் பால் பொருட்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்வது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கடவுளுக்கு படைக்கப்படும் தூய்மையான ஒரு பொருள் பாலுடன் சேர்த்து சிக்கனை விற்பனை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஒரே கடை என்றபோதும் இரண்டுக்கும் இடையே பெரிய தடுப்பு உள்ளது இரண்டுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.