சுஷ்மா ஸ்வராஜ்.. மிகச் சிறந்த பார்லிமெண்டேரியன்..! வீடியோ
சுஷ்மாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 67. சுஷ்மா ஸ்வராஜின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் பாஜக தலைவர்கள் உடனடியாக அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கடுமையான மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார்.
தற்போது சுஷ்மாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு டெல்லியில் உள்ள லோதி இடுகாட்டில் அரசு முழு மரியாதையுடன் சுஷ்மாவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ் கீழ்கண்ட 7 காரணங்களுக்காக மிகச் சிறந்தவர் என போற்றப்படுகிறர்.
1. சுஷ்மா பஞ்சாப் யுனிவர்சிட்டியின் முன்னாள் மாணவர், மேலும் அவர் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.
2. 1979 ஆண்டு ஹரியானா மாநிலத்தின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் மிகக் குறைந்த வயதில் அதாவது 25 வயதில் அவர் ஹரியானா மாநில கல்வி அமைச்சராக பதவி வகித்தார்.
3. பாஜகவின் முதல் பெண் செய்தித் தொடர்பாளர் என்ற பெருமையைப் பெற்றவர்.
4. 1998 ஆம் ஆண்டு டெல்லி அரசின் முதல் பெண் முதலமைச்சராக பணியாற்றினார்.
5. மிகச் சிறப்பாக ஹிந்தி பேசும் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தைக் பெற்றுள்ளார்.
6. ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி என்ற மாணவர் அமைப்பின் மூலம் 70 களில் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது,
7. மிகச் சிறந்த பார்ல்மெண்டடேரியன் அவார்டையும் சுஷ்மா பெற்றுள்ளார்.