புதுவை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்த இளைஞர்கள்
புதுச்சேரி மாநிலத்தில் அரசு வேலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தங்கள் சான்றிதழ்களை பதிவு செய்வதற்காக ஏராளமான இளைஞர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
புதுச்சேரி அரசில் காலியாக உள்ள முதுநிலை எழுத்தர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிகள் நீண்ட வருடங்களுக்கு பிறகு நிரப்பப்பட உள்ளது. இதனால் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்காக பதியப்பட்ட இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் இன்று காலை முதல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்தனர்.
தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புக்கான பதிவு செய்ய இன்று காலை முதலே இளைஞர்கள் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் வேலை வாய்ப்பு அதிகாரிகள் விரைந்து பதிவு செய்வதில் திணறி வருகின்றனர்.