Viral : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்ல! ஆபாச படம்&மெசேஜ் அனுப்பி வந்த ஆசிரியர் சிக்கினார்!
புதுச்சேரியில் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியும், ஆபாச படங்களை அனுப்பியும் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரை போலிசார் கைது செய்தனர்.
புதுச்சேரி 100 அடி சாலையில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் டேனியல் பல மாதங்களாக பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்ததுடன், தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படியும் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த மாணவி, வீட்டில் சொன்னால் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்களோ என்ற பயத்தில் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார். அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த ஆசிரியர், மாணவியின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்திருக்கிறார்.
புதுச்சேரி தனியார் பள்ளி மாணவியிடம் வரம்பு மீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை உடனடியாக POCSOவில் கைது செய்யப்பட வேண்டும். அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் பாலியல் கல்வியை கட்டாய பாடமாக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை @PuducheryPolice இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்! pic.twitter.com/Gomk4CAsQg
— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) August 2, 2022
மேலும் ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்து அதனை பார்க்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். மேலும் அதனை பார்க்கும்போது ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பும்படியும் தொல்லை கொடுத்திருக்கிறார். ஆசிரியரின் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி, சக மாணவர்களிடம் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், அந்த ஆசிரியரின் செல்போனை பிடுங்கிய மாணவர்கள், இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தனர். மேலும் இன்று சம்பந்தப்பட்ட பள்ளியை பல்வேறு சமூக அமைப்பினர் முற்றுகையிட்டு ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலிசார் இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவுக்குத் தகவல் அளித்ததை தொடர்ந்து,பாதிக்கப்பட்ட மாணவியிடம் குழந்தை நலக்குழுவினர் விசாரணை நடத்திய பின்பு, ஆசிரியர் டேனியலை முதலியார்பேட்டை காவல் நிலைய போலிசார் கைது செய்துள்ளனர். இதனிடையே ஆசிரியர் டேனியல் மாணவிக்கு அனுப்பிய ஆபாச வாட்ஸ்அப் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.