மாணவிகளின் செல்போனை சுத்தியால் அடித்து நொறுக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ
தடையை மீறி மாணவிகள் பயன்படுத்திய செல்போன்களை பள்ளி தலைமை ஆசிரியர் சுத்தியல் கொண்டு உடைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம், கார்வாரில், தடையை மீறி பள்ளிக்கு கைபேசி கொண்டுவந்ததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளின் கண்முன்னே கைப்பேசிகளை சுத்தியால் உடைக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.