தாறுமாறாக ஓடிய வெள்ளத்தில் சிக்கிய மீட்பு படையினர்..! தத்தளிக்கும் வீடியோ காட்சி..
ஆற்றினை கடந்து மீட்புப் படையினர் சென்று கொண்டிருந்த படகு திடீரென மரத்தில் மோதி சிக்கிக் கொண்டது அதன் பின்னர் படகும் கவிழ்ந்தது. இதில் மூன்று தீயணைப்பு வீரர்களும்,இரண்டு தேசிய மீட்புப் படை வீரர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தென்மேற்குப் பருவமழை காரணமாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோப்பல் என்கிற இடத்தில் உள்ள ஆற்றினை கடந்து மீட்புப் படையினர் சென்று கொண்டிருந்த படகு திடீரென மரத்தில் மோதி சிக்கிக் கொண்டது அதன் பின்னர் படகும் கவிழ்ந்தது. இதில் மூன்று தீயணைப்பு வீரர்களும், இரண்டு தேசிய மீட்புப் படை வீரர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அதன் பின்னர் விரயந்து வந்த மீட்புப் படையினர் அவர்களையும் மீட்டுள்ளனர். தற்ப்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.