Viral video : பொதுவெளியில் ஆம்ஆத்மி எம்எல்ஏவும் மனைவியுமான பல்ஜிந்தர் கவுரை அறைந்த கணவன்!
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் எம்எல்ஏ-வான பல்ஜிந்தர் கவுரை அவரது கணவர் சுக்ராஜ் சிங் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், தல்வாண்டி சபோ பகுதியின் எம்எல்ஏவாக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பல்ஜிந்தர் கவுர் இருந்து வருகிறார். கடந்த ஜூலை 10ம் தேதி நடைபெற்ற நிகழ்வு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், எம்எல்ஏவும், மனைவியுமான பல்ஜிந்தர் கவுர் மற்றும் அவர்து கணவர் சுக்ராஜ் சிங் சில பொதுமக்கள் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கோபமடைந்த சுக்ராஜ்சிங், தனது மனைவியை எம்எல்ஏ என்றும் பாராமல் கண்ணத்தில் அறைந்துள்ளார்.