புதுச்சேரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முதல்வருக்கு, ஆளுநருக்கு சங்கு ஊதி நூதன போராட்டம்!!

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ ஊழியர்கள் தங்களுக்கு 55 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்  கோரி ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, துறை அமைச்சர் சாய் சரவணகுமார் போன்று முகமூடி அணிந்து, அவர்கள் முன்பு சங்கு ஊதி, மணி அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

First Published Sep 16, 2022, 8:22 PM IST | Last Updated Sep 16, 2022, 8:22 PM IST

புதுச்சேரி மாநில அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 55 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட கோரி, சட்டமன்றம் அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 3வது நாளான இன்று தங்களது கோரிக்கைகளை, அரசுக்கு தெரிவிக்கும் வகையில் சங்கு ஊதி மணி அடிக்கும் நூதன போராட்டம்  நடைபெற்றது. 

சட்டப்பேரவை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகளுக்கு எந்த வித பதிலும் அரசு தெரிவிக்காததால் தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வகையில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, துறை அமைச்சர் சாய் சரவணகுமார் முகமூடி அணிந்து 3 பேர் நின்றனர். அவர்கள் முன்பு சங்கு ஊதி, மணி அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 55 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
பணி ஓய்வில் சென்ற தொழிலாளர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி ஓய்வு கால பண பலன்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

Video Top Stories