Asianet News TamilAsianet News Tamil

கழுத்தளவு தண்ணீரில் ஒற்றை கையால் குழந்தையை காப்பாற்றிய காவல் அதிகாரி..! மெய்சிலிர்க்கும் வீடியோ..

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தா சாவ்தா என்பவர் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி பச்சில குழந்தையை தலையில் சுமந்து காப்பாற்றினார்.
 

குஜராத் மாநிலத்தில் வதோதராவில் சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில்  வெள்ளம் சூழ்ந்துள்ளது இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர் இதில் விஸ்வாமித்திரி ரயில் நிலையம் அருகே உள்ள தேவிபுரம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தா சாவ்தா என்பவர் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி பச்சில குழந்தையை தலையில் சுமந்து காப்பாற்றினார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளரிடம் அவர் கூறியது.. தேவிபுரப் பகுதியை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தது கழுத்தளவு வரை  தண்ணீரி இருந்ததால் நானும் எனது குழுவினரும் கயிறு கட்டி மக்களை மீட்டு வந்தோம்  அப்போது ஒரு வீட்டில் ஒரு தாயும் குழந்தையும் சிக்கி இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக நாங்கள் அங்கு சென்று பார்த்தோம்.

குழந்தையை கைகளில் தூக்கிக் கொண்டு வருவது சிரமமாக இருந்ததால் ஒரு சிறிய பிளாஸ்டிக் கூடையில் சில துணிகளை வைத்து எடுத்து வந்து பின்னர் குழந்தையை அந்த கூடையில் வைத்து அதை என் தலையில் சுமந்து கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து வந்து பாதுகாப்பான இடத்தில் சேர்த்தேன். குழந்தையும் தாயும் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Video Top Stories