நான் சட்டத்தை மதிப்பவன் “மைக் இல்லாமல் பேசிய மோடி”

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்திற்கு தாமதமாக 10 மணிக்கு மேல் சென்றதால் ஒலி பெருக்கியை தவிர்த்து மைக் இல்லாமல் பேசியதோடு அங்கு கூடியிருந்த மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.

First Published Oct 1, 2022, 11:40 AM IST | Last Updated Oct 1, 2022, 11:40 AM IST

பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலத்தில் உரையாற்றும் வகையில் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் வருகிறார் என்றதும் அப்பகுதியில் பொதுமக்கள் திரளாக கூடியிருந்தனர். பிற  நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேர சுமார் 10 மணிக்கும் மேலாகிவிட்டது. மேலும் 10 மணி்யை கடந்து விட்ட காரணத்தால் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது என்பதால் மைக் இல்லாமலேயே மோடி உரையாற்றத் தொடங்கினார்.

இதனால் பலருக்கும் மோடி பேசியது கேட்கவில்லை. மேலும் பொதுக்கூட்டத்திற்கு தாமதமாக வந்ததற்காக அங்கு கூடியிருந்த மக்களிடம் பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories