PM Modi : காலில் விழுந்து ஆசி பெற்ற ஆனந்த் ராதிகா ஜோடி.. நேரில் வந்து மனதார வாழ்த்திய பிரதமர் மோடி - வீடியோ!

PM Narendra Modi : ஆனந்த் மற்றும் ராதிகா ஜோடிக்கு நேற்று ஜூலை 12ம் தேதி திருமணமான நிலையில், இன்று "ஆசிர்வாத்" நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

First Published Jul 13, 2024, 9:51 PM IST | Last Updated Jul 14, 2024, 11:46 AM IST

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் நேற்று ஜூலை 12ம் தேதி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இதில் பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் நேற்றைய தினமே பிரதமர் மோடி அவர்கள் ஆனந்த் ராதிகா திருமண விழாவில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிரதமர் மோடி அவர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தார். மணமகன் ஆனந்த் மற்றும் மணமகள் ராதிகா ஆகிய இருவரும், பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.