இந்தியா கேட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!
டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
டெல்லியில், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான கர்தவ்யா பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்து மலர் தூவி மரியதை செலுத்தினார். நாடாளுமன்ற கட்டிடம், மத்திய அரசு செயலகம், பிரதமர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது தான் சென்ட்ரல் விஸ்டா திட்டம்.