பிரகதி மைதான சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி; எப்போது துவக்க விழா?
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் மறுவடிவமைக்கப்பட்ட பிரகதி மைதான வளாகத்தில் இன்று நடந்த சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் மறுவடிவமைக்கப்பட்ட பிரகதி மைதான வளாகத்தில் இன்று நடந்த சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்டார்.
பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பரில் G20 தலைவர்களின் கூட்டம் நடக்க இருக்கிறது. இது உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கியமான அங்கீகாரத்தைக் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏறக்குறைய 123 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த வளாகத்தில் அமைந்துள்ள ITPO வளாகம் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நடத்துவதற்கு ஏற்ற இடமாக உள்ளது.
பிரகதி மைதானம் துவக்க விழாவிற்கு முன்பு இன்று காலை 10 மணிக்கு நடந்த பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாலை 6:30 மணிக்கு பிரமாண்டமான தொடக்க விழா நடைபெற இருக்கிறது. அப்போது பிரதமர் மோடி ஜி 20 முத்திரை மற்றும் நாணயத்தை வெளியிடுகிறார். சுமார் இரவு 7:05 மணிக்குத் திட்டமிடப்படி பிரதமர் உரையாற்றுவார்.