எனது உறவினர்கள் வந்தாலும் விடக் கூடாது: சீட்டாக்களை பாதுகாக்கும் நண்பர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சீட்டாக்களை விடுவித்த பின்னர், அங்கிருந்த இளம் சிறுத்தை நண்பர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சீட்டாக்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வழங்கினார். அதன் பிறகு சீட்டாக்களை பாதுகாக்க நியமிக்கப்பட்டவர்களிடம் பேசினார். சிறுத்தைகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார். சிறுத்தைகளின் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரை யாரையும் இங்கு நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். என் உறவினர்கள் யாராவது வந்தால், அவர்களை உள்ளே விடாதீர்கள் என்றார்.
உரையாடலின்போது, ''மிருகங்களால் மனிதனுக்கு ஆபத்தா அல்லது மனிதனால் மிருகங்களுக்கு ஆபத்தா?'' என்ற கேள்வியை மோடி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஊழியர்கள், ''மனிதர்களால் விலங்குகளுக்கு ஆபத்து உள்ளன'' என்றனர்.