மரண பீதியுடன் எல்லை தாண்டி நுழைந்த பாக்., வீரர்கள்... சிலிர்க்க வைக்கும் இந்தியாவின் பெருந்தன்மை.. வீடியோ..!
இந்திய எல்லைப் பகுதியில் நம் ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த 2 பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் இந்திய எல்லைக்குள் வந்து தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீரின் ஹாஜிபூர் செக்டர் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் இரு நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
அந்த வகையில் கடந்த 10ம் தேதி Hajipur செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது இதில் 10 பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்வதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது
இதற்கு இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர் இதில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர் அதில் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு வீரர்களின் உடல்களை கொண்டு செல்ல பயத்துடன் வெள்ளைக் கொடியை கட்டியபடி இந்திய எல்லைக்குள் வந்து பாகிஸ்தான் வீரர்கள் எடுத்துச் சென்றனர்.
இதனால் வெள்ளைக் கொடியுடன் அவர்கள் வந்ததால், அவர்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை.தற்போது இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது