Viral : டோல் பூத்தில் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! தூக்கிவீசப்பட்ட நோயாளியுடன் 4பேர் பலி!

நோயாளியுடன் வந்து கொண்டிருந் ஆம்புலன்ஸ் ஒன்று, டோல்பூத்-ஐ கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதிலு 4 பேர் பலியாகினர்.
 

First Published Jul 20, 2022, 7:25 PM IST | Last Updated Jul 20, 2022, 7:28 PM IST

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் நோயாளி மற்றும் 2 பேருடன் ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனைக்கு வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது மழையும் பெய்துகொண்டிருந்தது. வழியில் ஒரு டோல் பூத்-ஐ கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. அதில் நோயாளி, உடன் வந்த 2 பேர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகிய 4பேரும் தூக்கி விசப்பட்டு பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அதில் 2பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்து சிசிடிவி காட்சியை மருத்துவர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அதிவேகமாக ஆம்புலன்ஸ் வருவதைக் கண்ட டோல்பூத் பணியாளர்கள், தடுப்பை எடுக்க முயற்சிக்கின்றனர். மழையில் நனைந்த சாலையில் இருந்து காய்ந்த தரைக்கு வந்த ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸில் இருந்து நோயாளி தூக்கிவீசப்படும் காட்சியும் பதிவாகியுள்ளது.