புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மத்திய விஸ்தா திட்டம் - வைரல் வீடியோ!!

டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட மத்திய விஸ்தா திட்டத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி நாளை (8ம் தேதி) திறந்து வைக்கிறார். 

First Published Sep 7, 2022, 1:07 PM IST | Last Updated Sep 7, 2022, 1:07 PM IST

டெல்லியில் விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரை மத்திய விஸ்தா திட்டத்தின் ஒருபகுதியாக புதுப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டது. டெல்லியில் மத்திய அரசின் நிர்வாகப் பகுதியே மத்திய விஸ்தா பகுதி என்று அழைப்படுகிறது. மத்திய விஸ்தா பகுதிதான் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் உள்ளன. குறிப்பாக, குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட், ராஜபாதை, மத்திய அரசு அலுவலகங்கள், உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நார்த்பிளாக், நிதிஅமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக்  இங்கு உள்ளன.

ரூ.13,450 கோடியில் மத்திய விஸ்தா பகுதியை புதுப்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன் ஒருபகுதியாக ரூ.1,339 கோடியில் முதலில் 2 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. மத்திய விஸ்தா திட்டத்தின் ஒருபகுதியாக விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான பகுதிகள் புதுப்பிக்கும் பணிகள் முடிந்துள்ளன. இது தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

Video Top Stories