Video : வெட்டி சாய்க்கப்பட்ட மரம்! - பறவைகள் கொத்தாக இறந்த அவலம்!
மலப்புரத்தில் திடீரென வெட்டி சாய்க்கப்பட்ட மரத்தால் அதிலிருந்து பறவைகள் வெளியேறமுடியாமல் கீழே விழுந்து செத்து மடிந்தன.
கேரள மாவட்டம், மலப்புரத்தில் மரம் ஒன்று வெட்டி சாய்கப்பட்டது. அப்போது, அதிலிருந்த பறவைகள் வெளியேற முடியாமல் மரத்தோடு மரமாக கீழே விழுந்து இறந்தன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, மரத்தை வெட்டிய ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறை முடிவுசெய்துள்ளது. அந்த ஒப்பந்ததாரர் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் மரத்தை வெட்டியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.