Viral Video : பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்த பாஜக எம்பி ஜனார்த்தன மிஸ்ரா!

மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ஜனார்த்தன மிஸ்ரா சுத்தம் செய்யப்படாமல் அசிங்கமாக இருந்த பள்ளி கழிப்பறையை வெறும் கையில் அவரே சுத்தம் செய்தார்.
 

First Published Sep 24, 2022, 11:32 AM IST | Last Updated Sep 24, 2022, 11:32 AM IST

பாஜக இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யுவ மோர்ச்சா சேவா பக்வடா பிரச்சாரத்தை முன்னிட்டு கட்கரி பெண்கள் பள்ளியில் கழிப்பறையை சுத்தம் செய்தனர். எம்பி ஜனார்த்தன மிஸ்ரா வெறும் கையில் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பள்ளிக்கு சென்றபோது கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் இருந்ததை பார்த்தவுடன் அவரே வெறும் கையில் சுத்தம் செய்துள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories