இந்திய சுதந்திரத்தைப் போற்றுவோம்..! வீர உணர்வுடன் அதை கொண்டாடுவோம்..!
வெள்ளைக்காரர்களிம் இருந்து இந்த சுதந்திரத்தை பெற எத்தனை பாடுகள் ! நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்தியர்களாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதந்திர தினம் என்பது இன்று வரை இநதியாவில் ஒரு சடங்காகவே கடைபிடிக்கப் பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப் போல் இதுவும் ஒரு விடுமுறை நாளாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. பொதுவாக திரைப்படங்களில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவில் ஒரு பெரும் போராட்டத்திற்கு பிறகு, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காட்சிகள் இடம் பெற்று இருப்பதை நாம் பார்த்து இருப்போம்
ஆனால் வெள்ளைக்காரர்களிம் இருந்து இந்த சுதந்திரத்தை பெற எத்தனை பாடுகள் ! நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்தியர்களாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
இந்திய தீபகற்பம் என்றும் பாரத தேசம் என்றும் அழைக்கப்படும் நமது நாடானது மேற்கே பாகிஸ்தான் கிழக்கே வங்காளதேசம் என பெருவாரியான பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது மன்னர் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும் பசுமையாகவும் இருந்த நமது நாடு செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் வியப்பாக திகழ்ந்தது.
1857 ஆம் ஆண்டு இந்திய சிப்பாய் கலகம்’ என்ற இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர் ஷாபர் உருவாக்கினர். இதுவே, ‘முதல் இந்தியப் சுதந்திரப் போர்’ என்று அழைக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் தளபதியையும் நாடு கடத்தி, முகலாய வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.
இதைத் தொடர்ந்து 1867ல் ‘கிழக்கிந்திய கூட்டமைப்பை’ தாதாபாய் நவ்ரோஜியும், 1876ல் ‘இந்திய தேசிய கூட்டமைப்பை’ சுரேந்திரநாத் பானர்ஜியும் உருவாக்கினர்.
1905ல், ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்சியை கொண்டு வந்தனர். இதைக் கண்டு கொதித்த இந்தியர்கள் பலரும், சுதேசி மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். பால கங்காதர திலகர், முதல் இந்திய தேசியவாதியாக இருந்து, சுயராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டார்,
இதன்காரணமாக , தேசியவாதம் அடிப்படைவாதம் என இரண்டு தலைமைகளில் 1907 ஆம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது. 1911 ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் டர்பாரில் இந்தியாவிற்கு வந்தார். அவர், வங்கப் பிரிவினையை மீண்டும் பெறப்போவதாக அறிவித்தார்.
1915 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். அந்த நாள் நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள் மற்றும் ஒரு புதிய புரட்சியின் தொடக்க நாள் என்று சொன்னால் அது மிகையாகாது.
1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட் சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். 1919ல் நடந்த திட்டமிட்ட படுகொலையான ஜாலியன் வாலாபாக் சம்பவம் இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ் கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது.
1920 ஆம் ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்’ போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி முதல் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கினார். இதனால், காந்திக்கு 1922ல் ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பின்பு இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார்.
அமைதியால் மட்டும் தான் சுதந்திரம் அடைய முடியும் என்பதில் உறுதியாக இருந்த காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ நடத்தினார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அது தோல்வியில் முடிவடைந்தது.
அதற்கு அடுத்து லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக மகார்மா காந்தி கலந்துகொண்டார் . இந்த மாநாடும் தோல்வியடைந்தது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலயர்கள் இந்தியர்களை கொத்தடிமையாக்க துடித்தனர்.
1940ல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943 ஆம் ஆண்டில், நேதாஜி இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946ல் ‘ஆர்ஐஎன் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.
சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. இதனால் பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது.
இதையடுத்து 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள், ஜூன் 3 ஆம் தேதியன்று ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது.
மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார்.
பின்னர், 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.
ஆகஸ்ட் 15 ஆம் நாள் வரலாறாக மாறிய அந்த நாளை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது. சுதந்திர காற்றை சுவாசிக்க எத்தனையோ தலைவர்களின் உயிர்கள் மண்ணில் புதைந்தன. இப்படிபட்ட சுதந்திர தினத்தன்று டெல்லி கோட்டையில் பிரதமர் கொடியேற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து முப்படை அணிவகுப்பு நடைபெறும். இதையடுத்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இதே போல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்த அந்த மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றி உரையாற்றுவார்கள். மேலும் சுதந்திர போராட்டத் தியாகிகள் பெயரில் விருதுகளும் வழங்கப்படும்.
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றிலும் சுதந்திரம் பெற்ற இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, மறைந்த தேசத் தலைவர்களை போற்றி வணங்குவோம்.