Watch : கர்நாடக பேருந்துகள் சேதமடையும் அளவுக்கு முண்டியடிக்கும் பெண்கள் கூட்டம்!

கர்நாடகாவில், அரசு பேருந்துகளில் பெண்கள் கூட்டம் அலைமோதுவதால், ஆங்காங்கே பேருந்துகளின் இருக்கைகள், கதவுகள் போன்றவை சேதமடைந்து வருகின்றன.
 

First Published Jun 19, 2023, 3:48 PM IST | Last Updated Jun 19, 2023, 3:49 PM IST

கர்நாடக மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு, தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றான செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், அம்மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘சக்தி’ திட்டம் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக, கர்நாடக மாநிலங்களில் ஆன்மிக ஸ்தலங்களுக்கு பெண்கள் படையெடுத்து வருகின்றனர். பேருந்து சேவை இலவசம் என்பதால், எல்லா பேருந்துகளிலும் பெண்களின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

மாண்டியா மாவட்டம் மாலவல்லியில் பெண்கள் பேருந்தை பிடிக்க விரைந்தபோது கேஎஸ்ஆர்டிசி பேருந்து கதவுகள் கழன்று விழுந்தன. இதேபோல், சாமராஜநகரிலும் ஒரு பேருந்தின் கதவு கழன்று விழுந்தது. தற்போது அப்பேருந்துகளின் கதவுகள் வெல்டிங் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.