கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு CPIM பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இரங்கல்!

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்.

First Published Oct 2, 2022, 3:48 PM IST | Last Updated Oct 2, 2022, 3:48 PM IST

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69. கேன்சர் நோயால் நீண்ட நாளாக பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், தொடர்ந்து மருத்துவ சிகிச்சையையும் பெற்று வந்தார். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பொறுப்பில் இருந்து விலகினார். தொடர்ந்து, உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற கடந்த ஆக.28ஆம் தேதி அன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அக்டோபர் 1ம் தேதி (நேற்றிரவு) இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மறைந்த கொடியேரி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அரசியல் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Video Top Stories