Karnataka Rain : கர்நாடக கடலோர பகுதிகளில் கனமழை - ரெட் அலர்ட்!
கர்நாடக மாநிலத்தில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வருகிறது அடுத்த மூன்று தினங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதால் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது குறிப்பாக கடலோர கர்நாடகா மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உடுப்பி மற்றும் மலைநாடு பகுதிகளான சிவமொகா, சிக்கமகளூரு, மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வருகிறது அடுத்த மூன்று தினங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதால் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனைத்தொடர்ந்து தட்சிண கன்னடா சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.