இமாசலப் பிரதேசத்தில் பயங்கரம்; உருண்டு வந்த பாறங்கற்கள்: வைரல் வீடியோ!!
இமாசலப் பிரதேசம் மண்டியில் கனரக பாறைகள் சரிந்து விழுந்ததில் ஜேசிபி ஓட்டுநர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உனா, காங்க்ரா, ஹமிர்பூர், சிம்லா, சோலன், சிர்மவுர் மற்றும் மண்டி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் குலு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இந்த மாநிலத்தின் 4080 அடி உயரத்தில் இருந்த கிராமம் ஒன்று கடந்த சனிக்கிழமை முற்றிலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.