"Waiting for Shiva".. புத்தக வெளியீடு.. சனாதனத்தின் உண்மை சாராம்சம் குறித்து பேசிய சத்குரு மற்றும் Dr. சம்பத்!

Isha Foundation Sadhguru : ஒரு புதிய புத்தக வெளியீட்டுக்கு முன்னதாக ஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன், டாக்டர் விக்ரம் சம்பத் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

First Published Mar 25, 2024, 3:37 PM IST | Last Updated Mar 25, 2024, 3:37 PM IST

"Waiting for Shiva : Unearthing the Truth of Kashi's Gyan Vapi" என்ற அந்த புத்தகத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, டாக்டர் விக்ரம் சம்பத், ஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன், மனதைக் கவரும் ஒரு உரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாகரீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களை மீண்டும் நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து இந்த உரையாடல் இருந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் 800 ஆண்டுகால அடக்குமுறை ஆட்சியாளர்களின் அட்டூழியங்கள், சனாதன தர்மத்தின் உண்மையான சாராம்சம் மற்றும் பாரதம் ஏன் விழித்துக் கொண்டிருக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவர்கள் உரையாடினார். புத்தக வெளியீட்டுக்கு முன்னதாக நடந்த இந்த உரையாடலின் வீடியோவை சத்குரு தனது YouTube சேனலில் வெளியிட்டுள்ளார்.

Video Top Stories