மோடியும்,ஒபாமாவும் அங்கு செல்ல இதுதான் காரணமாம்..! போட்டு உடைத்த பியர் கிரில்ஸ். .வீடியோ

இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்ஸுடன் பயணித்த மேன் வெர்சஸ் வைல்ட்  ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியான நாளை மறுதினம் இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும்’ இந்த நிகழ்ச்சியை காண மக்களிடையே இப்போதே ஆர்வம் ஏற்பட்டு உள்ளது
 

First Published Aug 10, 2019, 5:59 PM IST | Last Updated Aug 10, 2019, 5:59 PM IST

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம், காட்டுக்குள் வன விலங்குகளின் தன்மை என்ன? என்பது குறித்தும், காட்டில் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டால் மனிதர்கள் தப்பிப்பது எப்படி? என்பது குறித்தும் அப்பகுதிகளுக்குச் சென்று விளக்கம் அளிப்பார். 

இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்ஸுடன் பயணித்துள்ளார்.   ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியான நாளை மறுதினம் இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும்’ இந்த நிகழ்ச்சியை காண மக்களிடையே இப்போதே ஆர்வம் ஏற்பட்டு உள்ளது இந்த நிலையில் மோடி உடனான பயணம் குறித்து மோடியுடன் பயணித்த்தை குறித்து பியர் கிரில்ஸ் தற்போது சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார் அதில் நான் இந்தியாவை விரும்பக்கூடிய தீவிர ரசிகன் இந்த ஒரு தருணத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஆளுமை நபரான பிரதமர் நரேந்திர மோடி உடனான மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி வந்தது எனக்கு கிடைத்த மாபெரும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன் சில வருடங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் ஒபாமா கலந்து கொண்டார் அப்போது எனக்கு ஒரு விதமான புரிதல் இருந்தது அதே போன்ற புரிதல் தான் தற்போது நான் உணருகிறேன் காரணம் பிரதமர் மோடியும் அவருடைய சிந்தனையும் ஒபாமாவின் சிந்தனையும் குறிக்கோளும் ஒத்துப்போவதை உணர்கிறேன் இரண்டு பேரின் கொள்கையும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதே

 இதை தவிர இந்த பயணம் எவ்வளவு சவாலாக எங்களுக்கு இருந்தாலும் மோடி அவர்களுக்கு பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியாத அளவிற்கு மிகவும் சாதாரணமாக எங்களுடன் பயணம் செய்தார் ஒரு சில இடங்களில் பயப்பட வேண்டிய ஒரு தருணம் ஏற்பட்டாலும் அவரிடம் எந்த ஒரு சலசலப்பும் பயமும் தென்படவே இல்லை

இந்த மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில்  இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டதால் உலகம் முழுக்க அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கப்படும் என்ற அந்த தொலைக்காட்சி குழுவினர் தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்