Watch : 2023ம் ஆண்டு சர்வதேச தினை உணவு ஆண்டாக கொண்டாட்டம்! நாடாளுமன்றத்தில் தினை உணவு!

2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடத் தயாராகும் போது, நாடாளுமன்றத்தில் தினை உணவுகள் பரிமாறப்பட்ட மதிய உணவு

First Published Dec 20, 2022, 5:36 PM IST | Last Updated Dec 20, 2022, 5:36 PM IST

2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடத் தயாராகும் போது, நாடாளுமன்றத்தில் தினை உணவுகள் பரிமாறப்பட்ட மதிய உணவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினை உணவை சர்வதேச உணவாக அறிவிக்க வேண்டும் என்று ஐநாவில் தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வந்தது. இதையடுத்து ஐநாவும் அறிவித்தது. இதை முன்னிட்டு இன்று நாடாளுமன்றத்தில் கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சமையல் கலைஞர்களால் 18 வகையான தினை உணவுகள் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டன.

Video Top Stories