இந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..!குவியும் பாராட்டு!!
இந்தியாவிலேயே முதல் பார்வைற்ற மாற்றுத் திறனாளியான பிரஞ்சால் பாட்டில் திருவனந்தபுரம் மாவட்டத்தின் துணை ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்ற பிரஞ்சால் பட்டில், திருவனந்தபுரம் மாவட்டத்தின் துணை கலெக்டராக பதவி ஏற்றுக் கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டீல். 6 வயதில் கண் பார்வையை இழந்த இவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்று, சர்வதேச உறவுகள் தொடர்பான தனிப்பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேசிய அளவிலான தரப்பட்டியலில் 124-வது இடத்தை பிடித்தார்.
இதை தொடர்ந்து தனது 26 வயதில் மென்பொருளின் உதவியுடன் இந்திய ஆட்சிப்பணிக்கான பாடங்களை கற்று, 2017-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி, தேசிய அலவிலான தரப்பட்டியலில் 124-வது இடத்தை பிடித்த பிரஞ்சால், இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி என்ற சிறப்பை பெற்றார். முசோரியில் உள்ள லால் பகதூர் தேசிய நிர்வாக இயல் கழகத்தில் பயிற்சி பெற்று அதே ஆண்டில் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பணியாற்றி வந்தார். அங்கு பெற்ற பணி அனுபவத்தின் அடிப்படையில் தற்போது திருவனந்தபுரம் மாவட்ட துணை ஆட்சியராக பிரஞ்சால் பட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐ.எஸ்.ஏ அதிகாரி என்ற பெருமையை பெற்ற பிரஞ்சால் பட்டில்க்கு பல தரப்பியில் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.