திடீரென வெள்ளத்தில் சிக்கி இருவர்.. பறந்து பறந்து காப்பாற்றிய விமானப்படை..! பரபரப்பு வீடியோ
தங்களது உயிரை பணயம் வைத்து இருவர் உயிரை துணிச்சலாக காப்பாற்றிய வீரருக்கு பாராட்டுகள் குவிகின்றன தற்ப்போது இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் தாவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதில் சிக்கிய 4 பேரில் இருவர் அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்துக்கான சுவற்றின் மீது ஏறி அமர்ந்து கொண்டனர்.
அதன் பின்னர் தண்ணீர் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் பாலத்தின் மேல் இருந்த இருவரால் வெளியேற முடியவில்லை. இதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமான படை வீரர்கள் பார்த்தனர் பின்பு உடனடியாக விமானப் படை வீரர் ஒருவர் கயிற்றை கட்டிக் கொண்டு பாலத்தின் மேல் இறங்கினார்.
அவர் அந்த இருவர் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்று அவர்களது இடுப்பில் கயிற்றை கட்டி விட்டு பின்னர் தானும் கயிற்றின் மூலம் ஹெலிகாப்டரை வந்தடைந்தார்.
தங்களது உயிரை பணயம் வைத்து இருவர் உயிரை துணிச்சலாக காப்பாற்றிய வீரருக்கு பாராட்டுகள் குவிகின்றன தற்ப்போது இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.