வீட்டு ஃபிரிட்ஜில் நாகப் பாம்பு; அதிர்ச்சி வீடியோ வைரல்!!

கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் ஒரு வீட்டின் ஃபிரிட்ஜில் பெரிய நாகப்பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

First Published Nov 14, 2022, 2:32 PM IST | Last Updated Nov 14, 2022, 2:32 PM IST

ஃபிரிட்ஜின் கம்ப்ரஸ்ஸரில் சுருண்டு படுத்து இருந்தது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்தப் பாம்பு விஷம் நிறைந்தது என்பதால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பு பிடிப்பவருடன் விரைந்து வந்து ஃபிரிட்ஜில் இருக்கும் பாம்பை இரும்பு கம்புகள் கொண்டு எடுத்து ஜாரில் அடைத்தனர்.