விஸ்வரூபம் எடுக்கும் நம் சுதந்திர இந்தியா - சிறப்பு பார்வை!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றால், அது நிச்சயம் மிகையல்ல. இது, ஏதோ ஒரு துறையில் இந்தியா முன்னோடியாக திகழ்வதால் ஏற்பட்ட மாற்றமல்ல, மாறாக ஒவ்வொரு துறையிலும் இந்தியா தனது சிறப்பான முயற்சியை அளித்து வருவதால் ஏற்ப்பட்ட மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. 

First Published Aug 14, 2023, 8:40 PM IST | Last Updated Aug 14, 2023, 8:40 PM IST

இந்தியாவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி, அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்தியா இன்று ஸ்மார்ட் போன்களுக்கான உலகின் மூன்றாவது பெரிய சந்தையாகவும், கார்களுக்கான ஆறாவது பெரிய சந்தையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மென்பொருள் துறையில் சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும், 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள். 

இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் 26 வயதுக்குட்பட்டவர்கள், இந்த தனித்துவமான மக்கள்தொகை அமைப்பு இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் ஒரு அதிவேக இயந்திரமாக மாற்றும் வல்லமையை கொண்டிருக்கிறது. பல உலக நாடுகளை ஒப்பிடும்போது, இளைஞர்களின் பலம் கொண்டு, இந்திய அதிவேகமாக வளர்ந்து வருகின்றது.