புதுவையில் பள்ளியை மூடக்கோரி பாஜகவினர் அத்துமீறல்
திமுக எம்.பி. ஆ. ராசாவை கண்டித்து புதுச்சேரியில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பள்ளியை மூடக்கோரியதால் பரபரப்பு.
இந்து மதம் குறித்து அவதூறாக பேசி வரும் திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்து முன்னணி, இந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் போராட்டத்தால் அங்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் தனியார் பள்ளி ஒன்றில் நுழைந்த பாஜகவினர் பள்ளியை மூடக்கோரினர், பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெறுவதால் பள்ளியை மூடக்கூடாது என்று மாணவர்களின் பெற்றோர் சூழ்ந்துகொண்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.