First Published Oct 18, 2022, 10:18 PM IST | Last Updated Oct 18, 2022, 10:18 PM IST
சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதற்கான இஸ்லாமிய குழுவைச் சந்தித்துப் பேசியது தெரிந்ததே. இந்த குழுவில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, டெல்லி முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி உடனான ஏஷியாநெட் நியூஸ் சிறப்பு பிரத்தியேக நேர்காணல் நடத்தியது. அதில், அந்த சந்திப்புக்கு வழிவகுத்த சூழ்நிலைகள், கூட்டத்தை நடத்த முன்வந்தவர்கள் யார், அந்தச் சூழலில் என்ன பேசப்பட்டது, என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார். அந்த விவாதம் உங்களுக்காக...