அவசர அறிவிப்பு : பட்டாசு வெடிக்க தனியிடம் ஒதுக்கியாச்சு... இனி உங்க இஷ்டத்துக்கு இடமே இல்லை..!வீடியோ

தமிழகத்திற்கு மட்டுமல்ல.ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

First Published Oct 24, 2019, 4:35 PM IST | Last Updated Oct 24, 2019, 5:44 PM IST

 தீபாவளி அன்று அதிகளவு பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என இயற்கை ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். பட்டாசைத் தடை செய்ய வேண்டும் என்றும் வழக்குகள் தொடரப்பட்டன, இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், தீபாவளி நாளில் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது.இந்த உத்தரவை பல்வேறு தரப்பினரும் வசைபாடி வருகின்றனர்.தமிழக அரசுதான் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக நினைத்து பலரும் இந்த விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.அதுவும் தமிழகத்திற்கு மட்டுமல்ல.ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.இந்திய முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வண்ணம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது 

தமிழகத்தில் பரவாயில்லை.நேரத்திற்கு மட்டும்தான் கட்டுப்பாடு.எங்கு வேண்டுனானாலும் பட்டாசு வெடிக்கலாம்.ஆனால் டெல்லி போன்ற இடங்களில் அப்படி அல்ல.நினைத்த இடத்தில் எல்லாம் வெடிக்க முடியாது.டெல்லி அரசின் சார்பில் ஆங்காங்கே ஒரு பொதுவான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும்.  அந்த குறிப்பிட்ட இடத்துக்கு போய் எல்லாரும் பட்டாசு வெடித்துவிட்டு வரலாம்.அந்த அளவுக்கு டெல்லியில் கட்டுப்பாடு உண்டு.அதுவும் உச்சநீதிமன்ற உத்தரவுதான் என்பதும்  குறிப்பிடத்தக்கது