மாபெரும் தத்துவமேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் இன்று.. போற்றவும், புகழவும் தேசிய ஆசிரியர் தினம்..!
மாபெரும் தத்துவமேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் இன்று.. இவர்களைப் போன்றவர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம். இந்த தினத்தில், ஆசிரியர்களுக்கு ஏசியன் நெட் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்கள்,
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.