சந்திராயன் 2 : கடைசி திக் திக் நிமிட வீடியோ ..! கலங்கிய சிவன்.. அப்போதும் தட்டிக்கொடுத்த மோடி..!
நிலவில் கால் பதிக்க இருந்த விக்ரம் லேண்டரின் சிக்னல் இறுதி நிமிடங்களில் கிடைக்காமல் போனதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை பிரதமர் மோடி தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் படுத்தினார்.
இன்று காலை மீண்டும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய மோடி அங்கிருந்து கிளம்பினார். அப்போது வாசல் வரை வந்து வழியனுப்பிய இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர்விட்டு கதறி அழுதார். அவரை கட்டிப்பிடித்து பிரதமர் ஆறுதல் படுத்தினார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்கச் செய்தது. இந்த காணொளி தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.