லாரியின் பின்னால் மாட்டிக் கொண்ட கார்.. தெரியாமல் ரிவர்ஸ் எடுத்த ஓட்டுநர்.. இறுதியில் நடந்தது என்ன?
கார் ஓட்டுநர் சாமர்த்தியமாக ஸ்டியரிங்கை திருப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சுங்கச்சாவடியில் கார் பின்னால் இருப்பது தெரியாமல் லாரி ஓட்டுநர் ரிவர்ஸ் எடுத்ததால் கார் சிறிது தூரம் பின்னோக்கி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் பாளையக்கரை சுங்கச்சாவடியில் கார் பின்னால் இருப்பது தெரியாமல் லாரியை ஓட்டுநர் ரிவர்ஸ் எடுத்துள்ளார். காரை பின்னோக்கி சற்று தூரம் தள்ளிச்சென்ற நிலையில், கார் ஓட்டுநர் சாமர்த்தியமாக ஸ்டியரிங்கை திருப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.