Watch : விநாயகருக்கு தீபாரதனை செய்து பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடிய சல்மான் கான்!
மும்பையில் தங்கை அர்பிதா வீட்டில் விநாயகர் சதுர்த்தியை நடிகர் சல்மான்கான் கொண்டாடினார்.
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. மும்பையில் ஏராளமான நடிகர்களும் அழகழகான விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டி வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். நடிகர் சல்மான்கான் தனது தங்கை வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டார். அங்கிருந்த விநாயகருக்கு தீபாரதனை செய்து வழிபட்டார்.