ரூ.85 ஆயிரம் கோடி செலவில் ஹைடெக் சிட்டியாக மாறும் அயோத்தி நகரம்!

ராமர் கோவில் திறக்கப்பட உள்ள அயோத்தி நகரத்தில் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

First Published Jan 19, 2024, 10:39 AM IST | Last Updated Jan 19, 2024, 10:39 AM IST

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. ஜனவரி 22-ந் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட உள்ள அந்த கோவிலில் தினமும் சுமார் 3 லட்சம் பேர் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக அயோத்தி நகரத்தில் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அடுத்த 10 ஆண்டுகளில் செய்து முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.