Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி முன்னிலையில் அயோத்தி கோவிலில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்ப்பட்டது

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் உள்ள ராம் லல்லா சிலைக்கு பிரதமர் மோடி முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

First Published Jan 22, 2024, 1:17 PM IST | Last Updated Jan 22, 2024, 1:17 PM IST

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதோடு, திரைப்பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களும் பங்கேற்று உள்ளனர். இந்த குடமுழுக்கு விழாவின் முக்கிய நிகழ்வாக, ராம் லல்லா சிலைக்கு பிரதிஷ்டை செய்த பிரதமர் மோடி, மலர் தூவி வழிபாடும் நடத்தினார். அப்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடன் இருந்தார்.