தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்த நாய் ஜூமிற்கு ராணுவ மரியாதை - வைரல் வீடியோ!!
ஜம்மு காஷ்மீரில், அனந்த்நாக்கில் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த நாய் ஜூமிற்கு ராணுவத்தினர் இன்று இறுதி மரியாதை செலுத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 9 ஆம் தேதி அனந்த்நாக்கில் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாய் ஜூம் நேற்று உயிரிழந்தது. இன்று அனைத்து தரப்பு ராணுவ அதிகாரிகளும் நாய் ஜூமிற்கு ராணுவ மரியாதை செலுத்தினர். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை அடையாளம் காட்டிய நாய் ஜூம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, முகத்தில் காயம் அடைந்து இருந்த நாய் ஜூமிற்கு கால்நடை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.