Watch : பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் நோய்! - கருனைக்கொலை செய்யப்பட்ட 213 பன்றிகள் குழிதோன்டி புதைப்பு!
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் எதிரொலியாக 213 பன்றிகளை கருணை கொலை செய்யப்பட்டுள்ளது. அந்த பன்றிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
கேரளா மாநில எல்லையில் உள்ள வளர்ப்பு பன்றி கூடத்தில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் பரவியது. அதனையடுத்து மற்ற பகுதியில் உள்ள பன்றிகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில், பண்ணையில் உள்ள 213. பன்றிகளை கருணை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வயநாடு மாவட்ட கால்நடை அலுவலர் டாக்டர்.ராஜேஸ் தலைமையில் 6 கால்நடை டாக்கடர்கள் பன்றிகளை கருணை கொலை செய்தனர். தொடர்ந்து பொக்லைன் மூலம் ஆழமான குழி தோண்டப்பட்டு பன்றிகள் அனைத்தும் புதைக்கப்பட்டது. இதனால் பன்றி பண்ணை உரிமையாளருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டது.