காதலித்ததாக ஆடையை கிழித்து கொலைவெறியாக தாக்கி வீதி வீதியாக இழுத்து வரப்பட்ட இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ..!
வேற சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்ததால், இளம் பெண் ஆடையை கிழித்து அடித்து துன்புறுத்திய கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பிரதேச மாநிலம் தெமாச்சி கிராமத்தில் வசிக்கும் பிலாலா சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண், பீல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இவ்ரகள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் . இதனால் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதகாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்து பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணை ஆடையை கிழித்து அடித்து துன்புறுத்தியுள்ளனர் அதன் பின்னர் சாலையில் துரத்தி துரத்தி அந்த பெண் அடித்த துன்புறுத்தி கிராமத்து இளைஞர்கள் விரட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. இதற்க்கு விளக்கம் அளித்துள்ள அலிராஜ்பூர் காவல் கண்காணிப்பாளர் விபுல் ஸ்ரீவத்சவா, இளம்பெண் அடித்து துன்புறுத்தப்பட்டது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்றும், வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருடம் மத்திய பிரதேசத்தில் இதை போல் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது