Viral video : குருகிராமில் நிலைதடுமாறிய கார்! - ஒருவர் பலி- அதிரவைக்கும் CCTV காட்சி!

குருகிராமில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வேடிக்கை பார்த்தவர்கள் மீது மோதி சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயமடைந்தனர்.
 

First Published Nov 8, 2022, 3:24 PM IST | Last Updated Nov 8, 2022, 3:24 PM IST

ஹரியானா மாநிலம், குருகிராமில் உத்யோக் விஹாரில் மதுபான கடை முன்பு சில நபர்கள் வாகன சாகசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, ஒரு கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேடிக்கை பார்த்த நபர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக அதிரவைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் 7 பேர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.