Shock video : முந்த முயன்ற டூவீலர் ஆம்புலன்சில் மோதி விபத்து! பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலை வளைவில் வாகனத்தை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த ஆம்புலன்சில் மோதி விபத்து. இந்த விபத்து தொடர்பன பதைப்பதைக்கும் சி சி டி வி காட்சிகள் வெளியாகி உள்ளன.
 

First Published Feb 28, 2023, 6:06 PM IST | Last Updated Feb 28, 2023, 6:06 PM IST

கேரள மாநிலம் மலப்புறம் அருகே கொண்டோட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக கீரைக்கல் பகுதியை சேர்ந்த அலி (56) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் முன்னே சென்ற வாகனத்தை வளைவில் வைத்து முந்தி செல்ல முயன்ற நிலையில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த ஆம்புலன்சில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அலி மலப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பதைப்பதைக்க வைக்கும் விபத்து சி சி டி வி காட்சிகள் வெளியாகி உள்ளன..

Video Top Stories