Watch : ஆந்திராவில் பிச்சை எடுப்பது போல் வந்து, தெலுங்கு தேசம் கட்சி பிரமுகரை தாக்கிய மர்ம நபர்! - சிசிடிவி

காக்கிநாடா, துனி நகரில் பிச்சை எடுப்பது போல் வந்த மர்ம நபர் ஒருவர், தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய பிரமுகரை தாகியுள்ளார். இந்த சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 

First Published Nov 17, 2022, 1:55 PM IST | Last Updated Nov 17, 2022, 1:58 PM IST

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி நகரில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் ஒருவரை கடந்த வியாழக்கிழமை பிச்சைக்காரர் போல் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் காயமடைந்தார்.

இச்சம்பவத்தில், பி.சேஷகிரி ராவுக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.