Viral : மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை புலி பிடிபட்டது! மக்கள் நிம்மதி பெருமூச்சு!
ஆறு பசுமாடுகளை கொன்று தின்று, மக்களை கடந்த 10 தினங்களாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை புலியை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் வீராஜ்பேட் தாலுக, மால்தாரே காபி எஸ்டேட் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒரு சிறுத்தை புலி நடமாடி வந்தது. மக்களும் பீதியடைந்த நிலையில் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையிடம் சிக்காமல் ஏமாற்றி வந்த சிறுத்தை புலியை இன்று வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.
இதற்காக வனத்துறை சார்பில் 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அதன் துணையோடு சிறுத்தை புலியை துபாரே முகாமில் சேர்த்தனர். இதையடுத்து, அந்த கிராமத்தில் வசிக்கும் காபி எஸ்டேட் செல்லும் கூலித்தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.