Watch : தொடர் மழை எதிரொலி : நீச்சல் குளமாக மாறிய பள்ளி வளாகம்!
மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் பருவமழை காலம் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர் மழை காரணமாக சியோனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி வளாகம் ஒன்றில் தண்ணீர் தேங்கி நீச்சல் குளம் போல் மாறியுள்ளது. அதில் மாணவர்கள் நீச்சலடித்து விளையாடி வருகின்றனர்.