VIDEO | திருப்பதி மலையில், கோவில் அருகே போட்டோ கடையில் தீ விபத்து! வானளாவ உயர்ந்த பெரும் தீயால் பரபரப்பு!
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள போட்டோ கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்துவிட்டு எரிந்த தீயில் கருகி ஐந்து லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசமந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே சுவாமி புகைப்படங்கள், விற்கும் போட்டோ கடை செயல்பட்டு வருகிறது. எப்போதும் பொதுமக்கள் நடமாட்டத்துடன் காணப்படக்கூடிய இந்த பகுதியில் திடீரென போட்டோ கடையில் தீவிபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ, கடை முழுவதும் பரவி வானளாவ உயர்ந்து கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீவிபத்தால், சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பதி தீயணைப்பு துறை அதிகாரிகள் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போட்டோ கடையில் எத்தனை பேர் பணிபுரிந்து வந்தார்கள் என்ற சரியான தகவல்கள் தெரியாத நிலையில் உயிரிழப்பு குறித்த தகவல்கள் பின்னர் தெரியவரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட போட்டோ பிரேம்கள் எரிந்து தீயில் சேதம் அடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.