மகர சங்கராந்தி திருவிழாவை முன்னிட்டு கங்காசாகர் சென்ற 400 யாத்ரீகர்கள் சிக்கி தவிப்பு – மீட்பு பணியில் குழு!
மேற்கு வங்கத்திலுள்ள கங்காசாகர் யாத்திரைக்கு சென்ற யாத்ரீகர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள கங்காசாகர் கண்காட்சியில் சிக்கித் தவிக்கும் 400 யாத்ரீகர்களை மீட்கும் பணியை இந்திய கடலோர காவல்படை தொடங்கியது. இரண்டு ஹோவர் கிராஃப்ட் மூலம் 182 பேர் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கங்கை மற்றும் வங்காள விரிகுடாவின் சங்கமம் கங்காசாகர் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி அன்று திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு மேற்கு கங்காசாகர் சென்ற யாத்ரீகர்கள் கடலில் சிக்கித் தவித்துள்ளனர். இந்த நிலையில் தான் அவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.